படம்: Padagotti - படகோட்டி
இசை: M.S.விஸ்வநாதன்
பாடியவர்: டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1964
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ
கொத்தும் கிளி
இங்கிருக்க ஓய் கோவைப்
பழம் அங்கிருக்க
தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ
கொத்தும் கிளி
இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்
தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ
இளம் வாழம்
தண்டாக எலுமிச்சம்
கொடியாக இருந்தவளைக்
கைப் பிடிச்சு இரவெல்லாம்
கண் முழிச்சு இல்லாத
ஆசையிலே என் மனச
ஆடவிட்டான்
ஆடவிட்ட
மச்சானே ஓடம் விட்டு
போனானே ஓடம் விட்டு
போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே
ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு
மின்னலாய்
வகிடெடுத்து மேகமாய்த்
தலைமுடித்து பின்னலாய்
ஜடைபோட்டு என் மனச
எடைபோட்டு
மீன் புடிக்க
வந்தவள நான்
புடிக்க போறேனே
மை எழுதும்
கண்ணாலே பொய்
எழுதிப் போனாளே
ஆசைக்கு
ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான்
காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே
நீதான் ஓடிப்போய்
சொல்லிவிடு
வாழைப்பூ
திரி எடுத்து வெண்ணையிலே
நெய் எடுத்து ஏழை மனக்
குடிசையிலே ஏத்தி வச்சான்
ஒரு விளக்கு
ஏத்தி வச்ச
கைகளிலே என் மனச
நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும்
அங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க நான் மட்டும்
இங்கிருக்க ஹோ ஹோ
ஹோ நான் மட்டும்
இங்கிருக்க
தாமரை அவளிருக்க
இங்கே சூரியன் நானிருக்க
ஹோ சாட்சி சொல்லும்
சந்திரனே நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ
ஆண் & பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே
நீ போய் சேதி சொல்ல
மாட்டாயோ