Home » Archives for February 2013
படம் : செம்பருத்தி
பாடல் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வெளியான வருடம்: 1992
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும் - இந்த
இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம் - அடி
சொல்லடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே
இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒன்னும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கணமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொன்னுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே
[Continue reading...]
படம் : நிழல்கள்
பாடல் : மடை திறந்து... தாவும் நதியலை நான்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வெளியான வருடம்: 1980
ஹ்ம்ம்.... ஹ்ம்ம்ம்ம்...
தலேலலலா தாலேலலலா தலேலலலா தாலேலலலா
தலேலலலா தலாலலால தளலலேலலலாலா
மடை திறந்து... தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்...
நினைத்து பலித்தது........ ஹோய்
நனனன்ன.....நான நனனன்ன..
நனனன்ன.....நான நனனன்ன..
ஹே ஹே...... பபபப்பா....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது... நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...(2)
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் ... நான்.......
(மடை திறந்து...)
நேற்றென் அரங்கிலே... நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே.. நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம் (2)
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...........
(மடை திறந்து...)
[Continue reading...]
படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் : பூவ எடுத்து
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஜெயசந்திரன், S.ஜானகி
வெளியான வருடம்: 1986
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
—
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
கல்யானம் கச்சேரி எப்போது
மனசுப்
—
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
—
வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
—
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
[Continue reading...]
படம்: கேப்டன் மகள்
பாடல் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
இசை: அம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள்: வைரமுத்து
வெளியான வருடம்: 1993
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
(எந்த பெண்ணிலும்)
கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
(எந்த பெண்ணிலும்)
முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
(எந்த பெண்ணிலும்)
[Continue reading...]
படம்: முள்ளும் மலரும்
பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
வெளியான வருடம்: 1978
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
[செந்தாழம்பூவில்...]
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
[செந்தாழம்பூவில்...]
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
[செந்தாழம்பூவில்...]
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
[செந்தாழம்பூவில்...]
[Continue reading...]