Thursday, 28 February 2013

Eeramaana Rojavae - Ilamai Kaalangal ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே - இளமைக் காலங்கள்

படம் :  இளமைக் காலங்கள்
பாடல் : ஈரமான ரோஜாவே 
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ். ஜானகி.
பாடல் வரிகள்: வைரமுத்து.
வெளியான வருடம்: 1983

ஈரமான ரோஜாவே 
என்னைப் பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே 
என்னைப் பார்த்து மூடாதே

கண்ணில் என்ன சோகம் 
போதும் ஏங்காதே  என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே
 என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்

உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லை என்றால் ஒரு சாபமிடு 
பொன்னாரமே……
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே 
என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் 
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை..
என் காதலி………
உன் போல என்னாசை தூங்காது ராணி
கண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே 
ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger