Thursday, 28 February 2013

Enavendru Solvathamma - Rajakumaaran என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை -இராஜகுமாரன்

படம் : இராஜகுமாரன்
பாடல் : என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள்: ஆர்.வீ .உதயகுமார் 
வெளியான வருடம்: 1994

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை

சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

தென்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக்கரும் கூந்தலும்
தொட்டாடும் மேடைபார்த்து வாங்கிப்போகும் வான் திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் சேர்க்கும் தாமரை
வன்னப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாங்காமள் நாணுவாள்
புது பூக்கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா ஹஹ ..
ஹா

கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானைச்சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப்பாடி ஒடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாஆஆஆள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாம் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாணம் என்னென்று சொல்வேனோ அதை எப்ப்ப்ப்படி சொல்வேனோ
(
என்னவென்று…)

0 comments:

Post a Comment

Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger