Thursday, 28 February 2013

Nadanthaal Irandadi - Sembaruthi நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - செம்பருத்தி


படம் : செம்பருத்தி
பாடல் : நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி 
இசை : இளையராஜா
பாடலாசிரியர்:
 வைரமுத்து
பாடியவர்கள்
 : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வெளியான
 வருடம்: 1992


நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி 
படுத்தால் ஆறடிபோதும் - இந்த 
இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம் - அடி 
சொல்லடி ஞானப்பெண்ணே - உண்மை 
சொல்லடி ஞானப்பெண்ணே 

இறக்கை உள்ள குஞ்சு இது 
கூடு ஒன்னும் தேவையில்லை 
புத்தியுள்ள பிள்ளை இது 
கெட்டு நிற்கப்போவதில்லை 
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா 
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா 
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை 
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை 
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான் 
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை 
சொல்லடி ஞானப்பெண்ணே 

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை 
அன்று முதல் இன்று வரை அக்கணமும் வாழவில்லை 
வெட்ட வெட்ட வாழைதான் - அது 
அள்ளித்தரும் வாழ்வைத்தான் 
வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொன்னுதான் 
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான் 
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான் 
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான் 
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை 
சொல்லடி ஞானப்பெண்ணே 

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger