Thursday, 28 February 2013

Kuyila Pudichi Koondil Adachi -Chinnathambhi குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி - சின்னத் தம்பி

படம் : சின்னத் தம்பி
பாடல் : குயிலை
புடிச்சி கூண்டில் அடைச்சி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வெளியான வருடம்: 1991


குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவ சொல்லுகிற உலகம்
மயிலை புடிச்சி காலை ஒடைச்சி
ஆட சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடும் அய்யா
அடி எப்படி ஆடும் அய்யா

(
குயிலை)

ஆண்பிள்ளை முடி போடும் பொன் தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அரிஞ்செனே பிறகு
ஆனாலும் பயனேன்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோபம்?

ஓலை குடிசையிலே இந்த ஏழை பிறந்ததற்கு
வந்தது தண்டனையா? இது தெய்வத்தின் நிந்தனையா?
இதை யாரொடு சொல்ல

(
குயிலை)

எல்லார்க்கும் தலைமேல எழுதொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாராற்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அதுதான்

ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழையென்று இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரொடு சொல்ல
(
குயிலை)

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger