Thursday, 28 February 2013

Endha Pennilum Iladha Onru - Captain Magal எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்

படம்: கேப்டன் மகள்
பாடல் : எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
இசை: அம்சலேகா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள்: வைரமுத்து
வெளியான வருடம்: 1993

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(
எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்
(
எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(
எந்த பெண்ணிலும்)

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger