Thursday, 28 February 2013

Sangeetha Jaathi Mullai - Kadhal Oviyam சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை - காதல் ஓவியம்

படம் : காதல் ஓவியம்
பாடல் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை 
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள்வைரமுத்து
வெளியான வருடம்: 1982



நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம் 
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் 
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம் 
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம் 
என் நாதமே வா... 

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை 
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை 
ராகங்களின்றி சங்கீதமில்லை 
சாவொன்றுதானா நம் காதல் எல்லை 
என் நாதமே வா... 

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை.... 

திருமுகம் வந்து பழகுமோ.. 
அறிமுகம் செய்து விலகுமோ.. 
விழிகளில் துளிநீர் வழியுமோ.. 
அது பிரிவதைத் தாங்க முடியுமோ.. 
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி, 
விழிகளில் இன்று அழுது பிரிவாகி, 
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ.. 
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது, 
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது, 
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி 
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி 
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி 
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் 
ஞாபக வேதனை தீருமோ.. 
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ.. 
ஆடிடுமோ.. பாடிடுமோ.. 

ராக தீபமே.. எந்தன் வாசலில் வாராயோ.. 
குயிலே... குயிலே... குயிலே... குயிலே... 
எந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் 
ராக தீபமே... 

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு 
அவள் நீதானே நீதானே.. 
மனக் கண்ணில் நின்று 
பல கவிதை தந்தமகள் 
நீதானே நீதானே.. நீதானே... 
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்.. 
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்.. 
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம்.. 
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம்.. 

சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் 
தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் 
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் 
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் 
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் 
முல்லை பூவில் முள்ளும் உண்டோ.. 
கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன.. 
ராக தீபமே.. 

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger