Sunday, 17 March 2013

Koduthathellam Koduthaan - Padagotti கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி

படம்: படகோட்டி
இசை: M.S. விசுவநாதன்
பாடியவர்:  T.M. சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1964

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் -
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான் -
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை!
படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை!
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்;
மடிநிறையப் பொருளிருக்கும் -
மனம்நிறைய இருளிருக்கும்!

எதுவந்த போதும் பொதுவென்று வைத்து -

வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்!

7 comments:

  1. கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளைத் தேடிக் கொண்டிருக்கையில் உங்களது வலைப்பூ தெரிந்தது. மிகவும் அருமையாகப் பதிவேற்றியுள்ளீர்கள். மிக்க நன்றி!
    பாபு கோதண்டராமன்

    ReplyDelete
  2. செம் அருமையான பதிவு

    ReplyDelete
  3. சிறப்பு !

    ஈழத்தில் இருந்து!

    ReplyDelete

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger