Monday, 4 March 2013

Kannuku mai Azhagu (Female) - கண்ணுக்கு மை அழகு - புதியமுகம்

படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: P.சுசீலா
வெளியான வருடம்: 1993




கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
அவரைக்கு பூ அழகு
அவருக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரை அழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு
இளமாறும் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு
(கண்ணுக்கு..)

ஆனந்த மஞ்சத்தில் அவழ்ந்தாலும் அழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டு அழகு
பென்ணோடு காதல் வந்தால் பிறை கூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள் கூட ஓர் அழகு
(கண்ணுக்கு..)

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger