Monday, 4 March 2013

Rojavai thaalatum thendral - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா

படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
வெளியான வருடம்: 1982



ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)

இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள் மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)

5 comments:

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger