Sunday, 19 May 2013

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது

திரைப்படம்: தமிழ் எம்.

வரிகள்: நா.முத்துகுமார்

இசை: யுவன் சங்கர் ராஜா

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

 

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே

உன்னோடு நானும் வருவேன்
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி கலைந்தாலுமே
வரப்பென்றும் அழியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி
மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்

யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவெங்கும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே
நிஜமெங்கும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீ இன்றி என் வாழ்க்கை பழுதல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காக தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன
அன்பே
உன்னோடு நானும் வருவேன்


0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger