Friday, 18 September 2015

Thanniye Thananthaniye : Rhythm - தனியே தன்னந்தனியே -ரிதம்

- 0 comments

படம்ரிதம்
இசைAR ரஹ்மான்
பாடியவர் ஷங்கர் மஹாதேவன்
வரிகள்வைரமுத்து
வெளியான வருடம்: 2000

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே..
புரியாதா.. பேரன்பே..ஓ..
தனியே.. தனியே.. தனியே..

அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரதில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில்
வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரதில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்து கொண்டோம், உயிர் காற்றை மாற்றி கொண்டோம்
அன்று கண்கள் பார்த்து கொண்டோம், உயிர் காற்றை மாற்றி கொண்டோம்
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டோம்
ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணைய கண்டோம்
நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே..
புரியாதா.. பேரன்பே..
புரியாதா..

என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது
பிழையென்று கருதிவிட்டாள்
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹாலோ சொல்லி கைகொடுக்க
தங்கமுகம் கருகிவிட்டாள்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
அந்த கள்ளி பிரிந்து சென்றாள், நான் ஜீவன் உருகி நின்றேன்
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள்
மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது
தனியே…

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா.. பேரன்பே..
புரியாதா..
[Continue reading...]
 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger