படம்: Nayakan (நாயகன்)
இசை: இளையராஜா
பாடியவர்: டி.
எல். மகராஜன்,
வரிகள்: புலமைப்பித்தன்
வெளியான வருடம்: 1987
ஆண்: அந்தி மழை மேகம் தங்க
மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
பெண்: ஹோய் இடி கொட்டு
மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
ஆ&பெ: தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
பெண்: அந்தி மழை மேகம் தங்க
மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
பெண்: நீர் நடக்கும்
பாதை எங்கும் நஞ்சையானது
ஆ&பெ: தனக்குதீம்
ஆண்: நாம் நடக்கும் பாதை
எங்கும் பஞ்சம் போனது
ஆ&பெ: தனக்குதீம்
பெண்: மாடங்கள் கலைகூடங்கள் யார்
செய்தார் அதை நாம் செய்தோம்
ஆண்: நாடாளும் ஒரு ராஜாங்கம்
யார் தந்தார் அதை நாம் தந்தோம்
பெண்: தேசம் என்னும்
சோலையில் வேர்கள் நாங்களே
ஆண்: தியாகம் என்னும்
ஜோதியின் தீபம் நாங்களே
ஆ&பெ: தாம்தனத்தோம்
தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
பெண்: அந்தி மழை மேகம் தங்க
மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
ஆண்: ஹேய் இடி கொட்டு
மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
ஆ&பெ: தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
பெ: ஓஓஓ... ஓஓஓ..
ஆ: ஓஓஓ... ஓஓஓ...
ஆண்: பால் குடங்கள்
தேன்குடங்கள் நூறு வந்தது
ஆ&பெ: தனக்குதீம்
பெண்: கை வணங்கும் தெய்வம்
ஒன்று நேரில் வந்தது
ஆ&பெ: தனக்குதீம்
ஆண்: பூவாரம் இனி சூட்டுங்கள்
கற்பூரம் இனி ஏற்றுங்கள்
பெண்: ஊரெல்லாம் களி ஆட்டங்கள்
என்னென்ன இனி காட்டுங்கள்
ஆண்: வீடுதோரம் மங்களம் இன்று வந்தது
பெண்: காணும் போது
நெஞ்சினில் இன்பம் வந்தது
ஆ&பெ: தாம்தனத்தோம்
தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
ஆண்: அந்தி மழை மேகம் தங்க
மழை தூவும் திருனாளாம்
பெண்: எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
ஆண்: ஹேய் இடி கொட்டு மேளம்
பெண்: அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
ஆ&பெ: தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்
அந்தி மழை மேகம் தங்க
மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம்
வந்ததென பாடும் பெருநாளாம்
0 comments:
Post a Comment