படம்: Padagotti - படகோட்டி
இசை: M.S.விஸ்வநாதன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன், பி. சுசீலா
வரிகள்: வாலி
வெளியான வருடம்: 1964
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன் (2)
கண்கள் படாமல்
கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
நேரில் வராமல்
நெஞ்சைத் தராமல் ஆசை
விடுவதில்லை ஹோய்
ஆசை விடுவதில்லை
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன்
இருவர்
ஒன்றானால் ஒருவர்
என்றானால் இளமை
முடிவதில்லை ஹோ
ஓ இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும்
கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை
ஹோய் பொழுதும்
விடிவதில்லை
தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பக்கம் நில்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை
ஹோ ஓஓ பித்தம்
தெளிவதில்லை
வெட்கமில்லாமல்
வழங்கி செல்லாமல்
வருத்தம் தெரிவதில்லை
ஹோய் வருத்தம்
தெரிவதில்லை
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன்
பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் பாவை
முகமல்லவா ஹோ ஓஓ
பாவை முகமல்லவா
அழகிய
தோள்கள் பழகிய
நாட்கள் ஆயிரம்
சுகமல்லவா ஹோய்
ஆயிரம் சுகமல்லவா
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான்
மலர்ந்தேன்
சுட்டால் பொன்
சிவக்கும்
சுடாமல் கண்
சிவந்தேன்
ஆஹாஆஆ
ஆஹா ஹா
ஹாஹாஹா
ஓஓஓஓஓஓ
ஆஹா ஹா
ஹாஹாஹா
0 comments:
Post a Comment